IPL2026 | கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி வெற்றி!

admin Avatar

by

1 minute

Read Time

சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதனிடையே நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 22வது லீக் ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு 48 ரன்களும், பிரெவிஸ் 41 ரன்களும் குவித்தனர். கொல்கத்தா தரப்பில் கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளும், சுனில் நரைன், அனுகுல் ராய், வைபவ் அரோரா தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

About the Author

About the Author

Easy WordPress Websites Builder: Versatile Demos for Blogs, News, eCommerce and More – One-Click Import, No Coding! 1000+ Ready-made Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports