ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் நோயாளி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்
இதற்கிடையே நேற்று இரவு பெண் நோயாளிக்கு மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் ஒருவர் கைகளில் ட்ரிப்ஸ் பொருத்திக் கொண்டிருந்தார் அப்போது திடீரென நோயாளிக்கு கைகளில் சிறிது ரத்தக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து அங்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி குபேந்திரன் என்பவர் மருத்துவர் மற்றும் செவிலியர் இருந்தும் ஏன் துப்புரவு பணியாளரை கொண்டு ட்ரிப்ஸ் ஏற்ற சொன்னீர்கள் என்று கேள்வி எழுப்பினார் ஆனால் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் துப்புரவு பணியாரிடம் கேட்டதற்கு சரியாக பதில் அளிக்காமல் கேட்ட கேள்விக்கு எல்லாம் முன்னுக்கு திமிரான பதிலை அளித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆற்காடு அரசு மருத்துவமனையில் போதிய நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத காரணத்தினால் இதுபோன்று தூய்மை பணியாளர்களை கொண்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுவதாகவும்.
அந்த வகையில் நேற்று இரவு நோயாளிக்கு தூய்மை பணியாளர் ட்ரிப்ஸ் ஏற்றியதால் அவருக்கு ரத்த கசிவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டை முன் வைத்தார் மேலும் மருத்துவம் படிக்காத தூய்மை பணியாளரை கொண்டு மருத்துவம் பார்க்க அனுமதித்ததை ஏன் என்று கேள்வி எழுப்பினார் இந்த வீடியோ காணொளி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நோயாளிகள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது எனவே இதன் மீது மருத்துவ நிர்வாகம் துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் சமூக ஆர்வலர்கள் நீண்ட நாள் கோரிக்கையாகவே முன்வைக்கின்றனர்.



















