இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா கூறியதாவது:
நான் மனதில் பட்டதை பேசிவிடுவேன். என்னிடம் ஒரு இயக்குனர் வந்து கதை சொன்னார். நான் எனக்கு இந்த கரெக்ஷன் வேண்டும் என்று சொன்னேன். மீண்டும் மீண்டும் திருத்தம் சொன்னேன்.அதையும் அவர் செய்கிறேன் என்றார்.
அப்போது நான் சொன்னேன்.எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. நான் போயிட்டு இருக்கேன். நீங்கள் நான் வேண்டும் என்று சொல்லி உங்க வாழ்க்கையை நீங்கள் இழந்துவிடாதீர்கள். அதனால், அந்த படத்தில்நான் இல்லை என்றாலும் பரவாயில்லை. நீங்க யரையாவது நன்றாக படம் வைத்து எடுத்து சந்தோஷமாக இருங்கள் என்றேன். மனதில் பட்டதை நான் சொன்னேன். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படம் லப்பர் பந்து. நான் சுயநலமாக சிந்தித்து இருந்தால், நான் சில திருத்தம் சொல்லி. சொன்னதையெல்லாம் செய்கிறாரே என்று அந்த கதையில் நான் நடித்து இருக்க முடியும்” என்றார்.



















